தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிக்க 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, இலங்கை என விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நின்று போய் இருந்தது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய மற்றொரு படமான 'மதராஸி' படத்தை முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்றார்கள். அதற்கடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதும் படப்பிடிப்பை மீண்டும் தாமதப்படுத்தியதாகச் சொன்னார்கள். தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால் 'பராசக்தி' உள்ளிட்ட தன்னுடைய மற்ற பட வேலைகளை ஆகாஷ் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.