இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
விமல் நடிப்பில் சமீபத்தில் 'பரமசிவன் பாத்திமா' என்ற படம் திரைக்கு வந்த நிலையில், அடுத்தபடியாக இரட்டை இயக்குனர்கள் நெல்சன் எல்தோஸ், மனிஷ் கே.தோப்பில் ஆகியோர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை அஜித் விநாயகர் பிலிம்ஸ் என்ற மலையாள பட நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முல்லை அரசி நடிக்கிறார். அவர்களுடன் சேத்தன், பருத்தி வீரன் சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். காமெடி கலந்த கதையில் உருவாகும் இந்த விமலின் 36வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது.