வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சமீப காலமாகவே மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்பாடு குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையில் கூட மலையாள திரை உலகில் போதைப் பொருளின் தாக்கம் பல வருடங்களாக இருப்பதை உறுதி செய்து இருந்தது.. சமீபத்தில் கூட பிரபல வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ மற்றும் இன்னொரு நடிகரான ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளத்திலேயே போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் கேரளா தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி இனிமேல் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிடமுமே சம்பளத்திற்கான ஒப்பந்தம் போடப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர்கள் நான் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்கிற வாக்குமூலத்தையும் ஒரு அபிடவிட்டாக எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதை ஒரு தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர்.
மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும் கேரள திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இது குறித்து கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் வரை இந்த அபிடவிட் கொடுத்துவிட்டு தான் படத்தில் பணியாற்ற வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.