தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2021ல் இதன் இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பையும் வெற்றியை பெற்றது. அடுத்து மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்து ஜோசப் அதை உறுதிப்படுத்தினார். அதேபோல முதல் இரண்டு பாகங்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.
குறிப்பாக இந்த மூன்றாம் பாகத்தை உருவாக்குவதில் ஹிந்தி படக்குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் திரிஷ்யம் முதல் பாகத்தை மறைந்த நிஷிகாந்த் காமத் இயக்கினார். அதன் இரண்டாம் பாகத்தை அபிஷேக் பதக் இயக்கியிருந்தார். இந்த மூன்றாம் பாகத்தையும் அவர்தான் இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் திரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்பதை ஒரு வீடியோ மூலமாக அறிவித்துள்ளார் மோகன்லால். அதேபோல அஜய் தேவ்கன் படக்குழுவினர் இன்னும் கொஞ்சம் டீடைலாக வரும் அக்.,2 காந்தி ஜெயந்தி அன்று படப்பிடிப்பு துவங்கும் என்றும் 2026 இதே அக்.,2 காந்தி ஜெயந்தி அன்று படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளனர். அதனால் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் 3 படம் கூட இதே தேதியில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.