சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படமெடுத்தவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து காந்தி வரலாற்றை எடுத்தார். இப்போது திருவள்ளுவர் வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் எடுத்துள்ளார். இந்த வாரம் படம் ரிலீஸ்.
இதில் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ''இந்த படத்துக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குமரி வள்ளுவர் சிலை இடம் பெறுகிறது. அதை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்தான் இப்போது முதல்வர். அவர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இளையராஜா இசை படத்துக்கு பலம்.
திருக்குறள் படத்தில் காதல் காட்சிகள், வசனங்களும் அதிகம் இருக்கிறது. வள்ளுவர் காமத்து பாலையும் எழுதியிருக்கிறார். படத்தில் சில போர்க்கள காட்சியும் இருக்கிறது. இந்த படத்தில் வள்ளுவர் வெள்ளை உடையுடன் இளமையாக வருகிறார். அவர் அப்போது என்ன உடை அணிந்து இருந்தார் என யாருக்கும் தெரியாது. அவர் உடை விஷயத்தில் விவாதம் தேவையில்லை. அவர் சொன்ன நல்ல விஷயங்களை எடுப்போம். பிற்காலத்தில வள்ளுவர் போட்டோவை வரைந்த வேணுகோபால் சர்மாதான் அவருக்கு ஒரு உருவம், உடை கொடுத்தார்'' என்றார்.