தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இன்றைய காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம், எக்ஸ் கணக்குகளை தவறாது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ஆனால் சில விஷமிகள் அவ்வப்போது இது போன்ற பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஹேக் செய்து அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதுடன் அவர்களை தவறாக நினைக்கும் விதமாக பல செய்திகளையும் தங்கள் இஷ்டம் போல வெளியிடுகின்றனர். அவ்வப்போது இது நடைபெறுவது உண்டு. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அலர்ட் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருப்பவை நான் பதிவிட்டது அல்ல. அதனால் நான் அந்தப் பக்கத்திற்கு மீண்டும் திரும்பி வரும் வரை யாரும் அந்த பக்கத்தில் பதில் கருத்து போட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது ஹேக் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அந்த சமயத்தில் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்று சில நாட்கள் வரை அதை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.