துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
தேவராஜ் மோனிடம் உதவியாளராக இருந்தவர் வி.அழகப்பன் என்கிற வேதம்பட்டி அழகப்பன். 'அண்ணக்கிளி' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னாளில் இயக்குனரான அவர் முதன் முறையாக 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர், விஜயன் கதையின் நாயகனாக நடிக்க 'கண்ணிலே அன்பிருந்தால்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படம் ஆரம்பிக்கும்போது விஜயன் மார்க்கெட் உள்ள நடிகராக இருந்தார். ஆனால் படம் சற்று தாமதமாக முடிந்ததால்0 அதற்குள் விஜயன் மார்கெட்டை இழந்து விட்டார். இதனால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. கடைசிவரை படமும் வெளிவரவில்லை.
இதனால் அழகப்பனுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 5 வருடங்கள் கடுமையாக போராடி அதன் பிறகு 'ஆகாய தாமரைகள்' என்ற படத்தை இயக்கினார். சுரேஷ், ரேவதி நாயகன் நாயகியாக நடித்தனர். ஜெய் கணேஷ், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்தனர். ரேவதியும், சுரேசும் அப்போது இளம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் அருமையான காதல் படமாக இந்த படம் அமைந்து பெரிய வெற்றி பெற்றது.
விஜயன் நடித்த 'கண்ணிலே அன்பிருந்தால்' படத்தை வெளியிட அழகப்பன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. தான் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் என்று அதனை எப்போதும் குறிப்பிடுவார்.