ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீபத்தில் வெளியான படம் பரமசிவன் பாத்திமா. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கி இருந்தார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது 'ஆட்டி' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். 'மேதகு' படத்தை இயக்கிய தி.கிட்டு இயக்கி உள்ளார். இசக்கி கார்வண்ணனே படத்தை தயாரித்துள்ளார்.
அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சவுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீசன் இசை அமைத்துள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது "மனித குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின பெண் குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
ஊட்டி, குன்னூர் பகுதியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் மற்றும் காரைக்குடியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் வெளியாகும் விதமாக தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன" என்றார்.