சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'கண்ணப்பா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தமிழ் நடிகையான ப்ரீத்தி முகுந்தன். திருச்சியைச் சேர்ந்த இஞ்சினியரிங் முடித்த ப்ரீத்தி மாடலிங் துறையில் நுழைந்து அப்படியே சினிமா பக்கம் வந்தார்.
கடந்த வருடம் 'ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும், அதற்கு முன்பாக 'ஓம் பீம் புஷ்' என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தற்போது 'மைனே பியார் கியா' என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழில் 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் நிவன் பாலி ஜோடியாக 'சர்வம் மாயா' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளது. அஜு வர்கீஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அகில் சத்யன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
'கண்ணப்பா' படத்தின் மூலம் தற்போது பிரபலமாகியுள்ளார் ப்ரீத்தி. அப்படத்தின் புரமோஷன்களில் அவரை அதிகம் காணவில்லை. புறக்கணிக்கப்பட்டாரா, அல்லது அவர் புறக்கணித்தாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும், “மகத்தான மனமார்ந்த நன்றியைத் தவிர வேறெதுவுமில்லை,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.