தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அபார்ஷக்தி குரானா. 'ஸ்திரீ, லூகா சூப்பி, ஹெல்மெட்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரூட்: ரன்னிங் அவுட் ஆப் டைம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக்) இணைந்து நடிக்கிறார். பவ்யா த்ரிகா, கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகும் இதனை வெருஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சூரியபிரதாப் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது " இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியும் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகிறது. ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் திரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம். கவுதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாடையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார். அவருக்கும் கவுதமிற்கும் இடையேயான காட்சிகள் முக்கிய இடத்தை பெறும் என்று நம்புகிறேன்" என்றார்.