படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் சினிமாவில் இன்று ஜுலை 4ம் தேதியன்று ''3 பிஹெச்கே, அக்கேனம், அனுக்கிரஹன், குயிலி, பறந்து போ, பீனிக்ஸ் வீழான்,” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் '3 பிஹெச்கே, அனுக்கிரஹன், பறந்து போ” ஆகிய படங்களில் அப்பா, மகன் பாசம் என்பது கதையோட்டத்தில் முக்கியமானவை. அதைச் சுற்றித்தான் படத்தின் திரைக்கதை நகரும்.
அவற்றோடு, '3 பிஹெச்கே' படத்திற்கும் 'பறந்து போ' படத்திற்கும் இடையே ஒரு வித்தியாசமான தொடர்பு உள்ளது. '3 பிஹெச்கே' படத்தில் சென்னையில் மூன்று பெட்ரூம் கொண்ட ஒரு அபார்ட்மென்ட்டை வாங்க வேண்டும் என்பதுதான் படத்தில் சரத்குமார் குடும்பத்தின் ஒரு கனவாக இருக்கும். அப்படி ஒரு அபார்ட்மென்ட்டை வாங்க அவர்கள் எத்தனை வருடம், எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
அதேசமயம், அப்படியான அபார்ட்மென்ட் என்ற சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நகர வாழ்க்கையை விட்டு வெளியேறி மலை, மைதானம், இயற்கைக் காற்று, இனிமையான சூழல், நண்பர்கள் சுதந்திரமாக இருங்கள் என்பதுதான் 'பறந்து போ' படத்தின் கதை.
இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் மற்றுமொரு தொடர்பும் உண்டு. '3 பிஹெச்கே' படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா, 'பறந்து போ' படத்தை இயக்கிய ராம்-ன் முன்னாள் உதவி இயக்குனர். அவருடனேயே பல வருடங்கள் பயணித்தவர். இவர்களது இரு வேறு மாறுபட்ட கதையசம் கொண்ட படங்களும் இன்று ஒரே நாளில் வெளிவந்துள்ளது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.
இரண்டு படங்களுமே குடும்பத்து ரசிகர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படங்கள்.