அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' |
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் பல நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் '3பிஹெச்கே'. குடும்பப்பாங்கான படமாக அமைந்து இப்படம் ரசிகர்களின் வரவேற்பை ஓரளவிற்குப் பெற்றது.
இப்படத்திற்கு மிகப் பெரும் பிரபலத்திடமிருந்து தற்போது பாராட்டு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் 'சாட்' செய்தார்.
அப்போது ஒரு ரசிகர், “நீங்கள் எப்போதாவது திரைப்படம் பார்ப்பீர்களா, ஏதாவது பிடித்தது ?,” என்று கேட்டுள்ளார். அதற்கு சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். '3பிஹெச்கே' மற்றும் 'அடா தம்பிச்சா' ஆகிய படங்களை சமீபத்தில் ரசித்துப் பார்த்தேன்,” என பதிலளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தமிழ்ப் படங்களையும் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
தங்கள் படத்தை சச்சின் பார்த்தது குறித்து '3பிஹெச்கே' தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “பல முறை டைப் செய்தும் வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சிலவற்றைக் கண்டுபிடித்து பிறகு பதிலளிக்கிறேன். ஏனெனில், நான் இப்போது என் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றைப் பார்த்தேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.