பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் டப்பிங் தொழில்நுட்பம் வந்த பிறகு ஏராளமான தெலுங்கு, கன்னட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை மலையாள படங்கள் நேரடியாக தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சில படங்கள் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி வெளியாகி இருக்கிறது. ஆனால் முதன் முதலாக டப் செய்யப்பட்டு வெளியான முதல் மலையாளப் படம் 'சேச்சி'.
இந்த படம் தமிழில் 'நடிகை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசை குருவான ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார். டி.ஜானகி ராமன் இயக்கிய இந்த படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ்.குமாரி, ஆரன்முள பொன்னம்மா, எஸ்.பி.பிள்ளை உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
கொச்சின் பிரதர்ஸ் சார்பில் சுவாமி நாராயணன் தயாரித்திருந்தார். 1950ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் அடுத்த ஆண்டு தமிழில் வெளியானது. ஒரு சாதாரண நடுத்தர கும்பத்து பெண் நடிகை ஆவதுதான் படத்தின் கதை.