தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

1972ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் 'படி பந்துலு'. இந்த படத்தை சந்திரசேகர் ரெட்டி இயக்கி இருந்தார். இதில் என்.டி.ராமராவ் தலைமை ஆசிரியராக நடித்திருந்தார். அவரின் மனைவியாக அஞ்சலி தேவியும், மகனாக கிருஷ்ணம் ராஜும் நடித்திருந்தனர். இது 'ஸ்கூல் மாஸ்டர் 'என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
இந்த படத்தில் நடித்ததற்காக என்.டி.ராமராவுக்கு பல விருதுகள் கிடைத்தது. இந்த படத்தில் என்.டி.ராமராவின் பேத்தியாக அதாவது குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது 9.
1979ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படம் 'வேட்டகாடு'. ராகவேந்திரா ராவ் இயக்கிய இந்த படம் 'நிஷானா' என்ற இந்தி படத்தின் ரீமேக். இது ஒரு வேட்டைக்காரனின் கதை. இந்த படத்தில் நாயகனாக என்.ராமராவ் நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 16. என்.டி.ராமராவுக்கு வயது 56.
ஸ்ரீதேவி சினிமாவில் பல சாதனைகள் படைத்தவர். தன்னை விட 40 வயது மூத்தவருடன் அதாவது தாத்தாவாக நடித்தவருடன் ஜோடியாக நடித்து அதிலும் சாதனை படைத்தார். இந்த அளவிற்கு வயது வித்தியாசத்துடன் யாரும் நடித்ததில்லை என்கிறார்கள்.