வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பிக்பாஸ் ராஜூ ஹீரோவாக நடிக்கும் 'பன் பட்டர் ஜாம்' படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் பட விழாவில் மேடையில் கண்கலங்கினார். சில இயக்குனர் இப்படி மேடையில் அழுவது, உணர்ச்சிவசப்படுவது அடிக்கடி நடப்பதுதான் என்றாலும், இவர் சொன்ன காரணம் பலரையும் உருக வைத்துள்ளது. அவர் பேசுகையில், ''இதற்கு முன்பு காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கினேன். (கவுசிக்ராம், அஞ்சலிநாயர் நடித்த படம்). நான் இயக்கிய முதல் படத்தை என் குடும்பத்துடன் பார்க்க விரும்பினேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது என்னிடம் பணமில்லை. என் நண்பர் சினிமாவாலா சதீஷ்தான், அதற்கான பணம் கொடுத்து என் குடும்பத்தினர் படம் பார்க்க ஏற்பாடு செய்தார்.
அடுத்து வந்த காலத்திலும், இந்த படத்திலும் அவ்வளவு உதவி இருக்கிறார். என்னை பற்றி சினிமா உலகில் அவ்வளவு பேரிடம் நல்லவிதமாக சொல்லியிருக்கிறார். நான் படம் பண்ண அவர் அழைத்தார். பல நேரங்களில் உன்னிடம் பணம் இருக்காது, இந்தா வெச்சுக்கோ என 25 ஆயிரம் கொடுத்து உதவுவார்'' என கண்கலங்கினார். ராகவ் பெயர் பின்னால் இருக்கும் மிர்தாத் என்ற பெயர் ஒரு தத்துவ ஞானியின் பெயர். அவர் கருத்துகளால் கவரப்பட்டு இந்த பெயரை வைத்துக்கொண்டாராம். 'பறந்து போ' பட நன்றி அறிவிப்பு விழாவிலும் ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி, தனது முந்தைய கஷ்டங்கள், அம்மாவை நினைத்து அழுதது குறிப்பிடத்தக்கது.