பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் செய்த சாதனைகள் என்ன? அவர் எத்தனை ஹிட் படங்களை கொடுத்தார். எத்தனை பேரை அறிமுகப்படுத்தினார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரின் 95வது பிறந்தநாள் நேற்று சென்னையில் சில இடங்களில் நடந்தது. பாலசந்தரிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய மோகன் சென்னை விருகம்பாக்கத்தில் அவர் பிறந்தநாளை கொண்டாடினார். பாலசந்தர் ரசிகர் மன்றம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கமல்ஹாசன் ஆபீஸ் வாசலில் வைக்கப்பட்டுள்ள பாலசந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து பலர் அவர் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
ஆனால், இந்த விழாக்களில் பாலசந்தர் படங்களில் நடித்த, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக, பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி தனது குருநாதரை புகழ்ந்து ஒரு டுவிட் கூட போடவில்லை. கமல்ஹாசன் ரொம்ப அமைதியாக இருந்துவிட்டார். 'ரோஜா' படத்தை தயாரித்து அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானும் கப்சிப். இப்படி அவரால் பலன் பெற்ற பலரும் அமைதியானது பாலசந்தர் ஆதரவாளர்கள், ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. கே.பாலசந்தரிடம் 25 ஆண்டுகள் கார் ஓட்டிய அவரின் பர்சனல் டிரைவர் கோவிந்தராஜன், பூவிலங்கு மோகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.