துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
1950களில் நடந்த கல்லக்குடி போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது அவரது அரசியல் வாழ்வில் பெரிய திருப்புமுனை.
ஆனால், கல்லக்குடி போராட்டத்திற்கு எம்ஜிஆர் நாடகத்தில் நடித்து நிதி திரட்டிக் கொடுத்தது பலரும் அறியாத ஒன்று. அந்த நாடகத்தின் பெயர் 'இடிந்த கோவில்'. எம்ஜிஆர் நாடக மன்றத்தினர் நடத்திய இந்தத நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
சினிமாவில் ஹீரோவான பிறகு எம்ஜிஆர் நடித்த முதல் நாடகம் இது. 1953ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த இந்த நாடகத்தில் எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி, கே.ஏ.தங்கவேல், முஸ்தபா, நாராயண பிள்ளை, திருப்பதி சாமி, குண்டுமணி உள்பட பலர் நடித்தனர்.
நாடகத்தின் கதையை விஸ்வம் எழுதியிருந்தார். ரவீந்திரன் வசனம் எழுதி இருந்தார். நாடகம் பார்க்க அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய், குறைந்த கட்டணம் 8 அணா. இரண்டு நாள் நடந்த இந்த நாடகத்தின் வசூலை போராட்ட குழுவிற்கு எம்ஜிஆர் வழங்கினார்.