பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி அதன்பிறகு நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குனர் என பன்முகம் காட்டி வருகிறார். மார்கன் படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தி திருமகன் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது காலில் செருப்பு அணியாமல் இருப்பது குறித்து அவர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், காலில் செருப்பு அணியாமல் நடக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. முக்கியமாக இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு சினிமா பிரபலம் என்பதால் விமானத்தில் பயணிப்பது, ஏசி காற்றில் உறங்குவது, பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. நாமே நினைத்தாலும் அதை எல்லாம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் என் காலில் செருப்பே அணியாமல் நடந்து செல்கிறேன். இதன் மூலம் மனசுக்கு நிறைவாக இருப்பது மட்டுமின்றி என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.