இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
யு டியூப் தளம் ரசிகர்களிடம் பிரபலமான பிறகு அதில் வெளியாகும் பாடல்களில் எது அதிகமான பார்வைகளைப் பெறுகிறதோ அதுதான் சூப்பர் ஹிட் என்ற ஒரு கணக்கு இன்றைய ரசிகர்களிடம் இருக்கிறது. யு டியூப் பற்றி அதிகம் பிரபலப்படுத்திய பாடல் என 'ஒய் திஸ் கொலவெறி' பாடலைத்தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவைக் கடந்து இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட அப்பாடல் பிரபலமானது. அதன் பின்னர்தான் டீசர், டிரைலர், முதல் சிங்கிள், லிரிக் வீடியோ, முழு வீடியோ என ஆரம்பித்து இன்று டீசருக்கு டீசர், க்ளிம்ப்ஸ் வீடியோ, இன்ட்ரோ வீடியோ என என்னென்னமோ வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரவர் விருப்பத்திற்கு ஒரு பெயரை வைத்து வீடியோக்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் யு டியூப் தளத்தில் வெளியான பாடல்களை எடுத்துக் கொண்டால் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் பாடல் 'ரவுடி பேபி' பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய அப்பாடல் 1,685 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
அதற்கடுத்து அனிருத் இசையில், 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' முழு வீடியோ பாடல் தற்போது 727 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 'எனிமி' படத்தில் தமன் இசையில் 'டம் டம்' பாடல் 577 மில்லியன்களுடன் உள்ளது. 'மாஸ்டர்' படத்தில் அனிருத் இசையில் 'வாத்தி கம்மிங்' வீடியோ பாடல் 550 மில்லியன் பார்வைகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய யு டியூப் பிரபலமானதற்குக் காரணமான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் 535 மில்லியன் பார்வைகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரையில் சுமார் 60க்கும் மேற்பட்ட பாடல்கள் யூ டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன.