வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 'நேரம், பிரேமம்' என மலையாளத்தில் இரண்டு ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழிலும் சேர்த்து பெரிய அளவில் பேசப்பட்டவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ஆனால் பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட டைரக்ஷனுக்கு ஏழு வருடம் இடைவெளி விட்டு விட்டார் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு அவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய 'கோல்ட்' திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பின்னர் தமிழில் நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு அது குறித்த அப்டேட் எதுவும் இல்லை.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பல்டி' என்கிற படத்தில் முழுமையான நடிகராக அறிமுகமாகியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இளம் நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சோடா பாபு என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன். இவரது கதாபாத்திரம் குறித்த ஒரு நிமிட டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த படத்தை உன்னி சிவலிங்கம் என்பவர் இயக்கி வருகிறார். வரும் ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாக இருக்கிறது.