பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என இன்றைய இளம் சினிமா ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளரக இருப்பவர் அனிருத். தற்போது தமிழில் 'கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'கிங்டம், மாஜிக், த பாரடைஸ்' ஆகிய படங்களுக்கும், ஹிந்தியில் 'கிங்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் பாடல்கள் யு டியூப் தளத்தில் சீக்கிரத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளித் தருகிறது. அதன் மூலமாகவும், மற்ற தளங்களில் அப்பாடல்களைப் பயன்படுத்தும் விதத்தில் கிடைக்கும் உரிமைகள் மூலமாகவும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. அதனால், அவரது படங்களுக்கான இசை உரிமையை இசை நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றன.
அவர் கைவசம் தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அடுத்து புதிதாக ஒப்பந்தமாக உள்ள படங்களுக்கு அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே அவர் 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறாராம்.
தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத சாய் அபயங்கர் பத்து படங்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத்தின் சில ஆஸ்தான இயக்குனர்கள் கூட சாய் பக்கம் சாயும் நிலையில் அனிருத் சம்பளத்தை உயர்த்த உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.