மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் |
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ், பத்மராஜு ஜெய்சங்கர் ஆகியோர் உருவாகியுள்ள படம் 'உருட்டு உருட்டு'. நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு அருணகிரி இசை அமைத்துள்ளார். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆனந்த் பாபு பேசும்போது “என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு கிடைப்பது மகிழ்ச்சி. இது எங்க அப்பா செஞ்ச புண்ணியம், நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது. உருட்டு உருட்டு படத்தை இயக்குநர் அழகாக செய்துள்ளார். என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்த போது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதே போல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.
கஜேஷ் பேசுகையில், ''என் தாத்தா மற்றும் தந்தையின் பெயரை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். இருவரை போல நானும் திரைத்துறையில் ஜொலிப்பேன். இந்த சினிமாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உறுதி தருகிறேன். அதிகம் பேசாமல் சாதிக்க விரும்புகிறேன்'', என்றார்.