டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பசுபதி, ரோகிணி நடித்த 'தண்டட்டி' படத்தை இயக்கியவர் ராம்சங்கையா. அந்த படம் பெரியளவில் ஹிட் ஆகாவிட்டாலும், கதை, நடிப்புக்காக பேசப்பட்டது. பாட்டியான ரோகிணி இறந்துபோக, அன்று இரவே அவரின் தண்டட்டி காணாமல் போகிறது. அதை கண்டுபிடிக்காமல் பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று உறவினர்கள் பிரச்னை பண்ண, போலீசான பசுபதி தவிக்க, என்ன நடக்கிறது என்று கதை நகரும்.
ஒரு துக்க வீட்டு பின்னணியில் அழுத்தமான கதை கொடுத்து இருந்தார் ராம்சங்கையா. 2023ல் படம் வெளியானது. அந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இன்னொரு படத்தை ராம் சங்கையா இயக்குகிறார். அதில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் 18வது படம். இந்த படம் தவிர, கவுதம் ராம் கார்த்திக், ஆர்யா நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தையும், கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தையும் தயாரிக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.
நேற்று கவின் படத்தின் பூஜை சிம்பிளாக நடந்த நிலையில், விரைவில் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு வெளியான 'லப்பர் பந்து' படத்தையும் தயாரித்தது பிரின்ஸ் பிக்சர்ஸ்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் நண்பரான லட்சுமணன் குமார் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த படம் தவிர 'கிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார் கவின். விரைவில் கிஸ் ரிலீஸ் ஆகிறது.