தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் வெளியான 'இடி மின்னல் காதல்' என்ற படத்தை இயக்கிய பாலாஜி மாதவன் தற்போது கன்னடம், தமிழில் தயாராகும் படத்தை இயக்குகிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. என்றாலும் சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை சிவராஜ்குமார் வெளியிட்டார்.
சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார். பி.சாகர் ஷா இணைந்து தயாரிக்கிறார்கள். சிவராஜ்குமார் முதன்முறையாக சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் பேருந்து பயணத்தில் நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணையை மையப்படுத்தி உருவாகிறது.