சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து விருந்து அளித்து, அவர்களுடன் போட்டோ எடுத்து இருக்கிறார். அவரும் வரும் தேர்தலில் அரசியலில் குதிக்கிறாரா என விசாரித்து, இது நல்ல காரியத்துக்கான பரிசு என்கிறார்கள். என்ன நடந்தது?
கடந்த மே 25ம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு ரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி சந்தித்து சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், ரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் என்கிறார்கள்.
அந்த விழாவில் பேசிய கார்த்தி, ''என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் ரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார். அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் ரத்தம் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் ரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் Love You என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் வேட்டி அணிந்து மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன்'' என்று புது தகவலையும் சொல்லியிருக்கிறார்.