இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
எம்.என்.ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம்.நாகரத்தினம் தயாரித்து, நடித்துள்ள படம் 'வள்ளிமலை வேலன்'. எஸ்.மோகன் எழுதி, இயக்கி உள்ளார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த வந்த இலக்கியா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.கே.ஆல்ட்ரின் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நாயகி இலக்கியா பேசியதாவது : காவிரி பாய்ந்தோடும் மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உங்கள் முன்னால் நாயகியாக நிற்கிறேன். நானெல்லாம் ஹீரோயின் ஆவேனா என நினைத்துள்ளேன்.
நான் சினிமாவுக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோயினாக நடித்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. சினிமாவில் நிறையப் பேர் குறுக்கு வழியில் முன்னேறுகிறார்கள். ஆனால் உண்மையாக உழைக்கும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையான திறமையாளர்களுக்கு சினிமா கலைஞர்கள் அனைவரும் வாய்ப்பு தர வேண்டும். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்றார்.