வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
1980ல் வெளிவந்த 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன். அடுத்து 1989ல் 'நாளைய மனிதன்' படம் மூலம் இயக்குனராக கால் பதித்தார். அந்த படம் ஹிட் ஆனதால் அதன் இரண்டாவது பாகமாக 1990ல் 'அதிசய மனிதன்' என்ற படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கினார்.
பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த 'அசுரன், ராஜாகிளி' படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் தோல்வியடைந்தது. அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய அவர் தோல்வியையே சந்தித்தார்.
அடுத்த ரவுண்டாக நடிப்பில் கவனம் செலுத்திய வேலு பிரபாகரன், 'பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா' போன்ற படங்களில் நடித்தார். 2009ல் 'காதல் கதை' என்ற படம் மூலம் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பிய அவர், 2017ல் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தையும் எடுத்தார்.
பி ஜெயாதேவி என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2017ல் ஆண்டு தன் 60வது வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். வேலு பிரபாகரன். நடிகை ஷிர்லே தாஸ், வேலு பிரபாகரன் உடன் 'காதல் கதை' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது மலர்ந்த காதலை அடுத்து 60வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இது அப்போது பேசுபொருள் ஆனது.
கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக செய்தி வெளியான நிலையில் அவரது குடும்பத்தார் மறுத்தனர். தொடர்ந்து கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெறுகிறார்.