‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் |

மலையாள திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான தக் லைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோசப் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்ற இவர், கடந்த வருடம் வெளியான பணி என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்கிற பெயரையும் பெற்றார். தன் மனைவிக்கு ஒரு தீங்கை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களுக்கு கணவன் எப்படி வித்தியாசமான முறையில் பாடம் புகட்டுகிறான் என்பதை மையப்படுத்தி ஒரு வித்தியாசமான பழிவாங்கல் கதையாக இந்த படத்தை அவர் கொடுத்திருந்தார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இதையடுத்து பணி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறேன் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் தற்போது அந்த இரண்டாம் பாகத்திற்கு டீலக்ஸ் என டைட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் நடைபெற்ற அவரும் ரேவதியும் நடிக்கும் ஆஷா படத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் இந்த படத்தின் டைட்டிலை ஜோஜூ ஜார்ஜ் அறிவித்தார்.




