தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான ஜோஷி கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஜு ஜார்ஜ் நடித்த 'அந்தோணி' என்ற படத்தை இயக்கினார். இப்போது அவர் உன்னி முகுந்தனுடன் பான் இந்தியா படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை உன்னி முகுந்தன் பிலிம்ஸ், ஜன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் 100 கோடி வசூலித்த ஆக்ஷன் திரைப்படமான 'மார்கோ' படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைகிறது.
'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆப் கோதா' போன்ற படங்களில் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என்.சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.
இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.