பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீ லீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ‛ஆஷிகி -3' என்ற படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் கார்த்திக் ஆரியனும், ஸ்ரீலீலாவும் காதலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக அதற்கு ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அவர் கூறுகையில், ‛‛என்னை பற்றி வெளியாகும் காதல் செய்தி முற்றிலும் வதந்தியாகும். சினிமாவை மட்டுமே நான் காதலித்து வருகிறேன். அதோடு நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் என்னுடைய தாயார் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலிக்க முடியும். அதனால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம். மேலும் சினிமாவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் இது போன்று வதந்திகளை பரப்பி என் மார்க்கெட்டை சரித்து விடாதீர்கள்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீ லீலா.