சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வெற்றி. இவர் நடிப்பில் அனிஸ் அஷ்ரப் இயக்கத்தில் கிரைம் திரில்லராக வர உள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் தான் இந்த இயக்குனர். நீங்க தொடர்ச்சியாக இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் நடிப்பது ஏன் என்று வெற்றியிடம் நிருபர்கள் கேட்க, 'நான் கலர்புல் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இப்படிப்பட்ட கதைகள் அதிகம் வருகிறது. இப்போது சினிமாவை பொறுத்தவரையில் கருதான் முக்கியம். அது நல்லா இருந்தால், எந்த படமும் ஓடும்.
இயக்குனர் அனிஸ் இயக்கிய குறும்படத்தை பார்த்தேன். அதிலிருந்து நம்பிக்கை பிறந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.'' என்றார்.
இதில், ‛இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி' படங்களில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். அவர் கதைப்படி பத்திரிகையாளராக வருகிறார். சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் தேவதாஜ் வில்லனாக நடித்து, படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் மட்டுமே ஓராண்டு நடந்ததாம்.