தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1951ம் ஆண்டு வெளிவந்த படம் 'ராஜாம்பாள்'. இதே பெயரில் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை திரைப்படமாக தயாரித்து, இயக்கினார் ஆர்.எம்.கிருஷ்ணசாமி. பின்னாளில் புகழ்பெற்ற வில்லனாகவும், நாடக கலைஞராகவும் இருந்த ஆர்.எஸ்.மனோகர் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதற்கு முன் அவர் தபால் துறையில் பணியாற்றிக் கொண்டே நாடகங்கள் நடத்தி வந்தார்.
ஆர்.மனோகருடன் மாதுரி தேவி, பி.கே.சரஸ்வதி, வீணை எஸ்.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதே கதை 1935 ஆம் ஆண்டில் 'ராஜாம்பாள்' என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வயது முதிர்ந்த ஒரு நீதிபதி ஒரு இளம் பெண் மீது மோகம் கொண்டு அவளை அடைவதற்காக பல சதி திட்டங்களை தீட்டுவதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுக்கப்பட்டது. ஆனால் அப்போது வட இந்தியாவில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததை எடுத்துக் காட்டி சான்றிதழ் பெற்றனர். அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தணிக்கை சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தின் தணிக்கை சான்றிதழை தயாரிப்பாளர் ஆர்.எம்.கிருஷ்ணசாமி புதுப்பிக்க விண்ணப்பித்தார்.
அப்போதைய சென்சார் அதிகாரி ஜி.டி.சாஸ்திரி சான்றிதழை புதுப்பிக்க மறுத்ததோடு, இது சமூக விரோதத் திரைப்படம், இதை வெளியிடவே கூடாது என்று திருப்பி அனுப்பினார். அதோடு முடிந்தால் இந்த படத்தை எரித்து விடுங்கள் என்றும் தயாரிப்பாளரிடம் கூறினார். ஆனால் அதனை தயாரிப்பாளர் ஏற்கவில்லை. தணிக்கை சான்றிதழை புதுப்பிக்கவும் இல்லை. இப்போது இந்த படத்தின் பாடல்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.