டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கேரளாவில் பிறந்தாலும் 'வைகை' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சுவாசிகா. அதன் பிறகு 'கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு வெளியான 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரீஎண்ட்ரியான சுவாசிகா தற்போது தமிழில் பிசியான நடிகை ஆகிவிட்டார். 'ரெட்ரோ, மாமன்' படங்களில் நடித்த அவர் தற்போது 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'போகி' என்ற படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மருத்துவம் படிக்க போராடும் ஒரு மலைகிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.
விஐ குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், பூனம் கவூர், வேலா ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், முரு ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ராஜா சி. சேகர். இசை மரியா மனோகர். எஸ். விஜயசேகரன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ''உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். சுமார் 6000 அடி உயரத்தில் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஹீரோ அழகர், தனது தங்கை கவிதாவை படிக்க வைக்கிறார். மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.
இறுதியில் கவிதா மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா என்ன நடந்தது என்பதே இந்த படத்தின் திரைக்கதை" என்றார். ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.