தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் '99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு'. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக ரக்சிதா மகாலட்சுமி நடிக்கிறார். 'பயர்' படத்திற்கு பிறகு நாயகியாக நடிக்கும் படம் இது. ஸ்வேதா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தி கூறும்போது, "படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது. எதனால் அப்படி நடக்கிறது? அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.
அவர்களின் விரும்பியபடி மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை. தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் , சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்" என்றார்.