தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நட்சத்திர நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கடந்த சில வருடங்களாகவே தமிழில் மட்டும் மிகுந்த கவனம் செலுத்தி படங்களை தயாரித்து வந்தார். குறிப்பாக அஜித் நடித்த படங்களை தொடர்ந்து தயாரித்து வந்த போனி கபூர் தற்போது தனது பார்வையை மீண்டும் பாலிவுட் பக்கம் திருப்பி 'நோ என்ட்ரி 2' என்கிற படத்தை தயாரித்து வருகிறார். வருண் தவான், அர்ஜுன் கபூர் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் போனி கபூர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்த போனி கபூரா இவர் என்று சொல்லும் அளவிற்கு பென்சில் போல ரொம்பவே ஒல்லியாக எடை குறைத்து காணப்படுகிறார். கிட்டத்தட்ட 26 கிலோ எடையை குறைத்துள்ளார் 68 வயதான போனி கபூர். இதற்காக உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்கு எல்லாம் போகாமல் வீட்டிலேயே உணவு முறையில் டயட்டை கடைபிடித்து இதை சாதித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, “என் மனைவி ஸ்ரீதேவி எப்போதுமே உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் முடி மாற்று சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தி வந்தார். அந்த சமயத்தில் அவர் அறிவுரைப்படி 14 கிலோ குறைத்தேன். அதன் பிறகு எனது தலையில் 6000 முடிகளை நட்டு செயற்கை முடி மாற்றமும் செய்து கொண்டேன்” என்று கூறியுள்ளார் போனி கபூர். சமீப வருடங்களாக உடல் எடையை கவனிக்காமல் இருந்த போனி கபூர் மீண்டும் தனது மனைவியின் ஆலோசனையை மனதில் கொண்டு இப்படி உடல் எடையை குறைத்துள்ளார் என்றே தெரிகிறது.