தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித்திருமகன் படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. ‛அருவி' அருண் பிரபு இயக்கும் இந்த படம் செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. நேற்று விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள், அவர் நடிக்கும் 25வது படம் சக்தித்திருமகன் என்பதால், நேற்றைய நிகழ்ச்சி களைகட்டியது. ஆரம்பத்தில் துப்பாக்கியால் சுட்டு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் விஜய் ஆண்டனி. இது அரசியல் கலந்த திரில்லர் கதை என்பதால் இந்த ஏற்பாடு என்றார்.
அடுத்து அவர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டுவதற்கு பதிலாக பிரியாணி வெட்டி, அதில் இருந்த பீசை சுற்றி இருந்தவர்களுக்கு கொடுத்தார். அடுத்து ஒரு ஆமை பொம்மையை மேடைக்கு எடுத்து வந்து, அதற்கு மாலை மரியாதை செய்தார். தான் கடைசியாக நடித்த மார்கன் படம் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஆமை முக்கியமான விஷயமாக இருந்தது. அதனால், இந்த மரியாதை, இனி ஆமையை அதிர்ஷ்டம் இல்லாதது என்று சொல்லாதீர்கள் என்றார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிண்டலாக பதில் அளித்தார். நான் உங்களை பார்க்கும்போது சந்தோஷம் ஆகிவிடுகிறேன். அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இதெல்லாம் மன்சூர் அலிகான் பாணியாச்சே. அந்த ஏட்டிக்கு போட்டிக்கு விஜய் ஆண்டனியும் மாறிவிட்டாரே என்று கமென்ட் அடித்தனர்.