பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களைப் போல அல்லாமல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் தொடர்ந்து பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் நகைக்கடை விளம்பரம் ஒன்று வெளியாகி அந்த வீடியோ ரசிகர்களிடமும் வைரலானது, அதாவது நகைக்கடை விளம்பர படத்தில் நடிக்க வரும் மோகன்லால் அங்கே இருந்த பெண்கள் அணியும் ஒரு ஆபரணத்தை பார்த்ததும் அதை விரும்பி யாரிடமும் சொல்லாமல் எடுத்துக்கொண்டு தனது கேரவனுக்குச் சென்று அணிந்து அழகு பார்க்கிறார். அந்த விளம்பர பட இயக்குனரும் மற்றவர்களும் நகையை காணாமல் தேடி மோகன்லாலிடம் சொல்வதற்காக கேரவனுக்குள் நுழைய அங்கே அவரே நகையை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து நிற்கிறார்கள். ஆண்களை கூட இந்த நகை கவர்கிறது என்கிற ரீதியில் இந்த விளம்பரம் உருவாகி இருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சினிமாவில் வரும் காட்சிகளையும் விளம்பரங்களில் வரும் காட்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் கேரள போலீசார் இந்த விளம்பரத்தில் நகை காணவில்லை என்று பட குழுவினர் தேடும்போது, சரியாக 112 என்கிற அவசர போலீஸ் உதவி எண்ணுக்கு டயல் செய்வது போன்ற ஒரு காட்சியையும் அதை தொடர்ந்து போலீஸ் யூனிபார்மில் இருக்கும் மம்முட்டி ஜீப்பில் ஏறி கிளம்பி வருகிறார் என்பது போன்று இன்னொரு காட்சியையும் இணைத்து, எந்த அவசர உதவிக்கும் இந்த நம்பரை அழையுங்கள் என்று சேர்த்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.