சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிற்காலத்தில் அம்பிகா - ராதா, ஊர்வசி - கல்பனா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் முதன் முதலாக 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. 1951ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கி இருந்தார். நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இது சிக்கலான திரைக்கதையை கொண்ட காமெடி படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது.
'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி நடனம் ஆடி வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், இவர்களில் பத்மினி முதலில் நடிகை ஆனார், லலிதா அதன் பிறகு அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். ராகினி ஏராளமான படங்களில் நடித்தபோதும் தமிழில் நாயகியாக நடிக்கவில்லை.
இவர்கள் மூன்று பேரும் இணைந்து பல படங்களில் ஆடி உள்ளனர். ஆனால் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. இதில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக பத்மினியும், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஜோடியாக லலிதாகவும், டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக ராகினியும் நடித்தார்கள். இவர்கள் தவிர டி.பாலசுப்ரமணியம், வி.கே.ராமசாமி, சி.வி.நாயகம், சி.எஸ்.பாண்டியன், 'காகா' ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, என்.ஆர்.லீலா, எம்.ஆர்.லீலா, எம். பாக்யம் ஆகியோரும் நடித்தார்கள்.