வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
1980களில், 1990களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஊரில் கூடி ரீ-யூனியன் பார்ட்டி நடத்தவது சில ஆண்டுகளாக வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 1990களில் ஜொலித்த தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் கோவாவில் ஒன்று கூடி ஆட்டம், பாட்டம், பார்ட்டி என கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்த பார்ட்டியில் இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபுதேவா, நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹீரோயின்களில் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இருக்கிறார்கள். இந்த பார்ட்டிக்கு பலர் வராவிட்டாலும், வந்தவர்களால் களைகட்டி இருக்கிறது. கோவா கடற்கரையில், போட்டில், ரிசார்ட்டில் இவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள்