மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ |
பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் வில்லன்கள் எந்த விதத்திலும் தங்களை விட பெயர் பெற்று விடக்கூடாது, கைதட்டல் வாங்கி விடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் 'காக்கி சட்டை' படத்தில் நாயகன் கமலுக்கு நிகராக சத்யராஜின் வில்லத்தனம் பேசப்பட்டதிலும் புகழ்பெற்ற 'தகடு தகடு' வசனம் பெயர் பெற்றதிலும் கமலுக்கு மிக முக்கிய பங்குண்டு.
'காக்கி சட்டை' படத்தின் படப்பிடிப்பு அண்ணா சாலை எக்ஸ்பிரஸ் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வில்லன் சத்யராஜ் இறந்த போன பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு மற்ற அடிபொடிகளிடம் 'பாடி இங்க இருக்கு தகடு எங்க இருக்கு?' என்று கேட்கிறார். அப்போது துணை நடிகருக்கு இடி சத்தம் காரணமா அவர் சொன்னது காதில் விழவில்லை. 'என்ன' என்று திரும்ப கேட்கிறார். சத்யராஜ் 'தகடு தகடு...' என்று வேறொரு மாடுலேசனில் சொல்கிறார். இது வசனத்தில் எழுதப்படவில்லை.
அப்படி அவர் வேறொரு மாடுலேசனில் சொன்னது கமலுக்கு பிடித்து விட்டது. ஆனால் இயக்குனர்கள் உள்ளிட்ட பலருக்கு பிடிக்கவில்லை. ஸ்கிரிப்டில் உள்ள படி இருக்கட்டும் ரீடேக் போகலாம் என்றார்கள். என்றாலும் கமல் 'வேண்டாம் இதுவே இருக்கட்டும். இந்த வசனத்தை முடிந்த அளவிற்கு மற்ற இடங்களிலும் பயன்படுத்துங்கள் அது படத்திற்கு பலமாக இருக்கும்' என்றார்.
அப்படியே செய்யப்பட்டது, படத்தின் வெளியீட்டுக்கு பிறகு சத்யராஜ் கேரக்டர் பேசப்பட்ட அளவிற்கு தகடு தகடு வசனமும் பேசப்பட்டது. இந்த இரண்டு வார்த்தை வசனம் சத்யராஜின் சினிமா கேரியரை திருப்பி போட்டது வரலாறு.