முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம், ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி கூலி பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. அன்று டிரைலரும் வெளியாக உள்ளது. கூலியில் ரஜினி தவிர சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். இதில் பலர் ஹீரோக்களாக நடித்தவர்கள், நடிப்பவர்கள்.
ரஜினியும், லோகேசும் முதன்முறையாக இணைந்து இருக்கிறார்கள். லியோ படத்துக்குபின் கூலி வருவதால், லோகேசும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். கமலுக்கு விக்ரம் என்ற ஆக் ஷன் படத்தை கொடுத்தவர், ரஜினிக்கு அதை விட பலமடங்கு பெரிய ஆக் ஷன் கதையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போதே கூலி குறித்து ஆங்காங்கே பேசி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால், எந்த பேச்சிலும் அவர் கூலி கதையை, அதன் கருவை சொல்லவில்லை.
ஆகஸ்ட் 2ம் தேதி டிரைலர் வருகிறது. அப்போது ஒரளவு கதை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. தங்கம் கடத்தல், தாதாயிசம் பின்னணியில் ஒரு பழிவாங்கும் கதையாக கூலி இருக்க வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் எமோஷனும் இருக்கிறதாம். கிட்டத்திட்ட விக்ரம் பாணியிலான அதிரடி ஆக் ஷன் தான் கூலி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் பெரிய பட்ஜெட்டில் பல மொழி ஸ்டார்களை வைத்து உருவாக்கி இருப்பதால் கூலியில் எதிர்பார்ப்பதை விட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதெல்லாம் சஸ்பென்ஸ் என்று லோகேஷ் தரப்பு சொல்கிறது.