சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் |
கடந்த 2018ல் தெலுங்கில் ராம்சரண், சமந்தா இணைந்து நடித்த ரங்கஸ்தலம் என்கிற படம் வெளியானது. புஷ்பா படத்திற்கு முன்பாக இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். தனது அண்ணனை கொன்றவர்களை தம்பி பழிவாங்கும் கதை. அதை கொஞ்சம் புதுவிதமாக சொல்லி இருந்தார் இயக்குனர் சுகுமார். குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. படமும் வெற்றி படமாக அமைந்தது.
இந்தப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் தற்போது அப்படியே ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. அதே சமயம் நேரடியாக திரையரங்குகளுக்கு வராமல் ஹிந்தியில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து ராம்சரணுக்கும், புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுகுமாருக்கும், பேமிலிமேன் வெப் சீரிஸ் மூலம் சமந்தாவுக்கும் சமீபகாலமாக பாலிவுட்டில் மிகப்பெரிய அறிமுகம் இருப்பதால் இத்தனை வருடம் கழித்து இந்த படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.