திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

ஹிந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத்கானுடன் 'ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அதையடுத்து 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீதாதேவி கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போன்ற நடிகைகளுடன் சாய்பல்லவியை ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்த படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வெளியானதை அடுத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எதிர்மறையான கருத்துக்கள் வெளியான போதும் அதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ராமாயணாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தொடங்க தயாராகி வருகிறார். அதோடு இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.