சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் |
'கேட்டரிங்' தொழில் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ல் வெளிவந்த 'மெஹந்தி சர்க்கஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பெண்குயின்' படத்தில் நடித்தார். குக் வித் கோமாளி டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற தனது உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்கள் இன்னும் விவாகரத்து கூட பெறவில்லையாம்.
அப்படி இருக்கையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை ஜாய் கிரிஸ்டலா வெளியிட்டு, தான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். ஜாய் கிரிஸ்டலாவிற்கும் இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே ‛பொன்மகள் வந்தாள்' பட இயக்குனர் பிரெட்ரிக்கை திருமணம் செய்து, அவரைவிட்டு பிரிந்தார்.
இதனிடையே ரங்கராஜ் - கிரிஸ்டலா திருமணத்தை வைத்து வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மனைவி, பிள்ளைகள் உள்ள சூழலில் இப்படி செய்யலாமா என ரங்கராஜையும், கிரிஸ்டலாவையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஜாய் கிரிஸ்டலாவை ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛சில பயணங்கள் அமைதியாக தொடங்கினாலும் நம்பிக்கையுடன் வளரும். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவியாக (திரு மற்றும் திருமதி ரங்கராஜ்) எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். எங்கள் காதல் அன்பு, கண்ணியம், முழு மனதுடன் மற்றும் மரியாதையுடன் துவங்கியது. இந்தாண்டு நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.