வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நாட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார் . அவர்களுடன் ராதிகா சரத்குமார், பாலிவுட் நடிகை ரவீணா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானிஸ்ரீயும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.