சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மதன் பாப், 71, உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(ஆக., 2) மாலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. அடிப்படையில் இசைக்கலைஞரான இவர் கிட்டாரிஸ்ட்டாக இருந்துள்ளார். தூர்தர்ஷன் டிவியில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் கே.பாலசந்தரின் அறிமுகத்தால் நடிப்பில் இறங்கினார். ‛நீங்கள் கேட்டவை' படத்தில் கீ போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் ‛வானமே இல்லை, தேவன் மகன், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ப்ரெண்ட்ஸ், தெனாலி, ஐயா, வேல்' உள்ளிட்ட 200 படங்கள் வரை நடித்துள்ளார்.
சினிமா தவிர்த்து டிவி காமெடி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி உள்ளார். பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். இவரின் டிரேட் மார்க்கே அவரின் சிரிப்பு தான். இவர் சிரிக்க ஆரம்பித்தால் சில வினாடிகள் சிரித்துக் கொண்டே இருப்பார். மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் அசத்தி உள்ளார். அதுமட்டுமல்ல இவர் தனது இளம் வயத்தில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார்.
மதன் பாப்பின் உடன் சென்னை, அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். ஜனனி, சினிமாவில் பாடகியாக வலம் வருகிறார்.
சிரிப்பால் குணமான திக்குவாய்மதன்பாப் இளம் வயதில் திக்குவாயாக இருந்துள்ளார். அவரின் சிரிப்பே அந்த பிரச்னையை குணமாக்கி உள்ளது.
மதன் பாப் பெயர் எப்படி வந்தது
மதன் பாப்-ன் நிஜ பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கும், இவரது சித்தப்பாவிற்கு ஒரே பெயர் என்பதால் இவரை வீட்டில் மதன் என்றே அழைத்துள்ளனர். தனது தம்பி பாபு உடன் இணைந்து ‛மதன் பாபு' என்ற இசை ட்ரூப் நடத்தி வந்தார். பின்னாளில் அதுவே மதன் பாப் ஆகிவிட்டது.
ஏஆர் ரஹ்மானுக்கு குரு
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சினிமாவில் இசையமைப்பாளராவதற்கு முன்பு பல இசைக் கலைஞர்களிடம் பணியாற்றி உள்ளார். அந்தவகையில் அவர் பணியாற்றிய இசைக்கலைஞர்களில் மதன் பாப்பும் ஒருவர். இவரின் ட்ரூப்பில் இணைந்து பல விளம்பரங்களுக்கு கீ போர்டு கலைஞராக பணியாற்றி உள்ளார் ரஹ்மான். மதன் பாப் தனது குரு என ரஹ்மானே பழைய பேட்டிகளில் கூறி உள்ளார்.