நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ரஜினிகாந்த் - சத்யராஜ் இடையிலான நட்பு மையக் கருவாக இருக்கும் எனத் தெரிகிறது.
டிரைலரின் ஒரு காட்சியில் 'நெகட்டிவ்' இமேஜில் ரஜினியின் தோற்றம் ஓரிரு வினாடிகள் வந்து போகிறது. அது என்ன மாதிரியான தோற்றம் என்பதைத் தெரிந்து கொள்ள அந்த 'நெகட்டிவ்' இமேஜை அப்படியே 'பாசிட்டிவ்' இமேஜ் ஆக ரசிகர்கள் மாற்றிப் பார்த்துள்ளனர். அதில் இளமைக் கால ரஜினியின் தோற்றம் உள்ளது.
1981ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'தீ' படத்தில் ரஜினிகாந்த் அப்படித்தான் இருப்பார். அப்படத்தில் துறைமுக கூலி தொழிலாளியாக அந்தக் கால ரஜினி ஸ்டைலில் பீடி பிடித்தபடி நடித்திருப்பார் ரஜினி. ஏறக்குறைய அதே தோற்றத்தை 'கூலி' படத்திலும் லோகேஷ் ரி-க்ரியேட் செய்துள்ளார் என்றே தெரிகிறது. படத்தின் பிளாஷ்பேக்கில் அந்தக் காட்சிகள் வந்தால் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வாய்ப்புள்ளது.
'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் அவரை ஏ.ஐ மூலம் மிக இளமையாகக் காட்டியதைப் போல, கூலி' படத்திலும் அப்படி ஒரு ரஜினியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.