5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பாஜ மூத்த தலைவர் அதிரடி பேச்சுகளுக்கு சொந்தக்காரர் எச்.ராஜா. இந்து மத நம்பிக்கைகளை, வழிபாடுகளை சீண்டினால் சீறிவிடுவார். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் துணிச்சலாக குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்தியவர். இந்நிலையில் 'கந்தன் மலை' என்ற படத்தில் அவர் மீசை முறுக்கி கம்பீரமாக நடித்து இருக்கிறார். அவரை நடிகராக்கிய அனுபவங்களை நமது தினமலருக்கு பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குனர் வீரமுருகன்.
அவர் கூறியது: தலைப்புக்கு ஏற்ப இந்த கதையில் திருப்பரங்குன்றம் பிரச்னை, நம் உரிமைகள், அரசியல் பிரச்னைகள் பேசப்படுகிறது. இதில் ஆதி என்ற கேரக்டரில் எச்.ராஜா நடித்து இருக்கிறார். 'நாயகன்' கமல் மாதிரி மக்களுக்கு நல்லது செய்கிற பெரிய மனிதராக அவர் வருகிறார். அவர் கந்தன் மலைக்கு என்ன செய்கிறார் என கதை செல்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை காரைக்குடி அருகில் எடுத்தோம். ரொம்ப ஆர்வமாக நடித்தார். உங்களுக்கு தேவைப்படும் அளவுக்கு என்னை பயன்படுத்திகோங்க, தயங்காதீங்க என்றார். இந்து மக்கள் காவலராக அவர் கேரக்டர் இருக்கும். அவர் ஒரு பாடலையும் எழுதி பாடலாசிரியர் ஆகி இருக்கிறார். அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.
பட அறிவிப்பு வந்தது முதல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்தை வெளியிடுங்கள் என்கிறார்கள். ஆனால் தமிழக சினிமா நிலைமை, தியேட்டர் யார் பிடியில் இருக்கிறது என்பது தெரிந்தது தானே. சரியான நேரத்துக்கு காத்து இருக்கிறோம். தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை வந்தால் அனைவரும் எளிதாக பார்க்கும் வகையில் யு டியூப்பில், தாமரை டிவியில் ரிலீஸ் செய்வோம். இதற்கு முன் நான் இயக்கிய 'கிடுகு' படத்துக்கு பிரச்னை வர, இப்படிதான் வெளியிட்டோம். இன்றும் அந்த பட சீன்கள் சமூக வலைதளங்களில் வைரல், அதை விட அதிக பவராக 'கந்தன் மலை' இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.