23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
நடிகை தமன்னா சினிமாவில் நடிப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் என் முகத்தில் பருக்கள் வந்தால் அதற்கென தனியாக சிகிச்சை எதுவும் செய்து கொள்வதில்லை, காலை எழுந்ததும் பிரஷ் பண்ணாமல் வாயில் ஊரும் உமிழ்நீரை தொட்டு வைப்பேன். அதுவாகவே சரியாகி விடும் என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு தோல்மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷர்மா என்பவர் கூறும்போது "இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. பிரபலங்கள் இதுபோன்ற பரிசோதிக்கப்படாத சிகிச்சை முறைகளை பற்றி பொதுவெளியில் பேசும்போது, மக்கள் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு தோல் மருத்துவரும் இத்தகைய சிகிச்சையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்" என்கிறார்.
ஆனால் சில நாட்டு மருத்துவர்கள் தங்கள் பதிவில் "தமன்னா சொல்வது சரிதான். மனிதனுடைய உமிழ்நீரில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அது சிறிய வகை புண்களை சரி செய்யக்கூடியது. மருத்துவம் வளராத காலத்தில் மனிதர்கள் காயங்களை ஆற்றுவதற்கு உமிழ்நீரைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.