தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல நடிகையான சங்கீதா ‛பிதாமகன், உயிர், காளை' உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபகாலமாக குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறார். பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டா தளத்தில் சங்கீதா தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயர் கிரிஷ் என்பதை நீக்கி சங்கீதா ஆக்டர் என மாற்றியதாக கூறப்படுகிறது. இதை வைத்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை, பிரிய போவதாக செய்தி பரவியது.
இதுபற்றி சங்கீதாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்தி முற்றிலும் தவறானது. கிரிஷ், திருவண்ணாமலை போய் விட்டு திரும்பி வந்து கொண்டுள்ளார். என்னிடம் பிரேம் கூட இதுபற்றி கேட்டார். அதெல்லாம் இல்லை என கூறினேன். பொதுவாக நான் என் பெயருக்கு பின்னால் என் அப்பாவோ அல்லது கணவர் பெயரை போட விரும்பமாட்டேன்'' என்றார்.